சேவல் குட்டையான அலகினோடும்
குருத்துப் போன்ற கொண்டையோடும்
பட்டுச் சொக்காய் இறகினோடும்
பரிதி வண்ணச் சிலிர்ப்பி னோடும்
கட்டழகு வால்விசிறி
கருது போலக் காற்றிலாடப்
பெட்டகமாய் இரு சிறகைப்
பைக்குள்ளே சொருகிக் கொண்டு
நட்டமான கூரை மீது
நடனமாடிக் காட்டி விட்டுப்
"பட்"டெனச் சிறகடித்துப்
பகட்டாகக் கழுத்தை நீட்டி
அட்டகாச மாகக் கூவி
அனைவரையும் எழுப்பி வைத்துப்
பெட்டைக் கோழி பின்னே சுற்றும்
பெருமை மிக்க சேவலைப் பார்!
(12 வயதில் எழுதியது)
|
|
Copyright
© www.ravianbil.com l
Home l
Email |