HomePoetryStoriesLyrics & SongsTamil PoemsContact us



கம்பனை நம்பாதே!

நடையைப் பார்த்தால் அன்னநடை போல இல்லையே
இடையைப் பார்த்தால் கொடிஇடையாய்த் தோண வில்லையே
தொடையைப் பார்த்தால் வாழைத் தண்டு போல இல்லையே
சடையைப் பார்த்தால் கார்குழலைக் காண வில்லையே

காதலிக்க நல்ல பொண்ணு கிடைக்க வில்லையே
காமதேவன் அம்பு நெஞ்சை உடைக்க வில்லையே
காதல்பசி காது ரெண்டை அடைக்க வில்லையே
கண்டபடி நரம்பு எல்லாம் பொடைக்க வில்லையே

மொட்டவிழ்ந்த மோகமலர் முகர வில்லையே
முகர்ந்து விட்டு ரீங்கரித்து நகர வில்லயே
பட்டுவிரல் கைத் தலத்தைப் பற்ற வில்லையே
குட்டி போட்ட பூனை போலச் சுற்ற வில்லயே

காலைமானைத் தேடிக் கண்டு பிடித்த தில்லையே
காம சூத்திரம் ரகசியமாய்ப் படித்த தில்லையே
மலைத் தேனும் கொலைத் தேனும் புளித்த தில்லையே
மன்மதனும் இம்சை இங்கு அளித்த தில்லையே

காதில் மெல்லக் காதல் சொல்லப் பாவை இல்லையே
தூது செல்லப் பறவை இனம் தேவை இல்லையே
போதை செய்யும் கோதை அவள் பார்த்த தில்லையே
போட்ட சட்டை வேட்டி எல்லாம் வேர்த்த தில்லயே

பள்ளியறை என்று சொன்னால் பரீட்சை நிறைய உண்டு
பள்ளியறைப் பாட்டு பாடும் புலவர் சபையைக் கண்டு
பள்ளியறைப் பக்கம் போக இஷ்டமே இல்லே
பள்ளியறை பார்க்காட்டி நஷ்டமே இல்லே

வெண்பாவின் எதுகை மோனை எனக்குத் தெரியலே
பெண்பாலின் இரட்டைக் கிளவி எனக்குப் புரியலே
கம்பன் கோத்த வர்ணனையை நம்ப முடியலே
கற்பனையில் குதிரை கட்டி எம்ப முடியலே



 

             Copyright © www.ravianbil.com   l   Home   l   Email