காதல் நியதி காற்றும் பனித் துளியும், பெண்ணே பெண்ணே - ஒன்று
கலந்திடுதல் காண்பாய் நீ, பெண்ணே பெண்ணே - சுனை
ஊற்றும் நதி அண்டிப், பெண்ணே பெண்ணே - மிக்க
ஊடலுடன் உடல் சேர்க்கும், பெண்ணே பெண்ணே - அந்த
ஆற்றும் சமுத்திரத்தில், பெண்ணே பெண்ணே - அன்புச்
சங்கமம் தான் கொள்ளுது பார், பெண்ணே பெண்ணே - இவை
ஏற்றும் இணைந் தென்ன, பெண்ணே பெண்ணே - இன்று
என்னை நீ இணைந்திடலால், பெண்ணே பெண்ணே!
உலவி வரும் வெண் மேகம், பெண்ணே பெண்ணே - மலை
உச்சிதனை முகர்வது காண், பெண்ணே பெண்ணெ - வெள்ளி
மலரதனின் இதழ் அப்பி, பெண்ணே பெண்ணே - வண்டு
மொய்ந்தாடி ரீங்கரிக்கும், பெண்ணே பெண்ணே - அங்குக்
குலவிவரும் பறவை இனம், பெண்ணே பெண்ணே - கொஞ்சி
அலகுகளைச் சேர்ப்பது பார், பெண்ணே பெண்ணெ - முத்தம்
உலகசம நியதி யெனில், பெண்ணே பெண்ணே - எனக்கு
ஒன்று நீ தராவிடில் பயன்தான் என்னே?
( ஷெல்லியின் Love's Philosophy தமிழாக்கம் ... நண்பர் ஜெமினி கணேசன் கேட்டதற்காக )
|
|
Copyright
© www.ravianbil.com l
Home l
Email |